இளவரசியாக இருந்துகொண்டு இப்படியா! அவமானப்பட்ட மெர்க்கல்: வெளியான புகைப்படம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தனது கணவர் ஹரியுடன் இணைந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜீ ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த அரசு குடும்ப தம்பதியினர் இன்று Tonga வுக்கு சென்றுள்ளனர்.

முதல் அரச பயணம் என்பதால் தம்பதியினரின் பயணம் குறித்து அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுமக்களிடம் இவர்கள் நடந்துகொள்ளும் விதம், நிகழ்ச்சிகளில் இளவரசர் ஹரி ஆற்றும் உரை என அனைத்தும் கவனிக்கப்படுகின்றன.

குறிப்பாக, ஒரு நடிகையாக இருந்து அரச குடும்பத்து மருமகளாகியுள்ள மேகன் மெர்க்கல் ஏற்கனவே பிரித்தானியாவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது, ஆடை விடயத்தில் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இது அரசமுறை பயணம் என்பதால், பிற நாடுகளுக்கு செல்கையில் ஆடை விடயத்தில் மிகவும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பது அரச குடும்பத்தின் வரையறை. ஆனால், அதில் கவனமாக இருந்த மெர்க்கல், தான் அணிந்திருந்த ஆடையின் ரசீதை கூட கழற்றாமல் அதை அணிந்துகொண்டு தனது கணவருடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஒரு இளவரசியாக இருந்துகொண்டு இப்படி ஒரு சாதரண விடயத்தை கூட கவனிக்காமல், இப்படியா பொது இடத்தில் ஆடையில் கவனம் இல்லாமல் இருப்பது என விமர்சனம் எழுந்துள்ளன.

மேலும், இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers