அகதிகளை பிரித்தானியாவுக்குள் கடத்திய பெண்: பதிலுக்கு நீதிபதி செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சோமாலிய அகதியான ஒரு பெண் தனது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி இரண்டு அகதிகளை பிரித்தானியாவுக்கு கொண்டு வந்தபோது பிடிபட்டார்.

ஆனால் மனிதக் கடத்தல் செய்த குற்றத்திற்காக அவரை சிறைக்கு அனுப்புவதற்கு பதில், அவரை புகழ்ந்து பேசியுள்ளார் நீதிபதி.

சோமாலியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்து பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் Hana Abdi Qahtan (46). பஹ்ரைனுக்கு சென்ற அவர், தனது தாய் மற்றும் மகனின் பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி இரண்டு சோமாலிய அகதிகளை பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்தார்.

புலம்பெயர்தல் விதிகளை மீறுவதற்கு உதவியதற்காக அவருக்கு ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதிக பட்சமாக 14 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை வழங்கப்படலாம்.

ஆனால் தீர்ப்பு வழங்கிய நீதிபதியாகிய Sarah Paneth, Hanaவிடம், நீங்கள் உங்கள் குடும்பத்தினரின் பாஸ்போர்டுகளை பயன்படுத்தி உங்கள் உறவினரான ஒரு பெண்ணையும் அவரது மகனையும் பிரித்தானியாவிற்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

அது மிகப்பெரிய குற்றம், அதற்கு மிக நீண்ட கால சிறைத்தண்டனை வழங்கப்படும். துரதிர்ஷ்டவசமாக உங்கள் மகளே ஏமனில் கொல்லப்பட்டிருக்கிறார், அந்த நேரத்தில் நீங்களே புகலிடம் தேடும் ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.

அதனால் உங்களைப் போலவே புகலிடம் தேடும் அந்த பையனுக்கு நீங்கள் உதவியிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு பொருளாதார ரீதியில் எந்த வித லாபமும் இல்லை, அந்தப் பெண் உங்கள் நெருங்கிய உறவினரும் இல்லை.

இதில் என்னைத் தொட்ட விடயம் என்னவென்றால், ஒரு அகதியாக வந்த நீங்கள் முயற்சி செய்து ஆங்கிலமும், சுகாதாரமும் சமூக நலனும் கற்றிருக்கிறீர்கள்.

உங்கள் வீட்டிலேயே பிள்ளைகள் இருக்கும்போது நீங்கள் தேவையிலிருக்கும் மற்றவர்களுக்கு உதவியிருக்கிறீர்கள்.

உங்களால் கவனிக்கப்படுபவர்கள், நீங்கள் அதிக சிரத்தை எடுத்து அவர்களை கவனித்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

உங்களுக்கே உடல் நலப் பிரச்சினைகள் இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் மற்றவர்களுக்கு உதவுகிறீர்கள்.

உங்களை வெறும் ஒரு மனிதக் கடத்தல் செய்பவர் என்று என்னால் கூறிவிட முடியாது.

அதனால் இதுதான் என்னுடைய தீர்ப்பு, இதை ஒரு அசாதாரண வழக்காக கருதி உங்களை சிறையில் அடைக்காமல், உங்களுக்கு எளிதான சமூக சேவையை தண்டனையாக வழங்குகிறேன் என்றார்.

புலம்பெயர்தல் விதிகளை மீறிய ஒரு அகதியை சிறைக்கு அனுப்பாமல் அவரது மனிதாபிமானத்தைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது பலரையும் நெகிழச் செய்துள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்