தேனிலவை சந்தோசமாக கொண்டாட சென்ற பிரித்தானிய தம்பதிக்கு நேர்ந்த கதி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தேனிலவை கொண்டாட சென்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட விமான விபத்தில் பிரித்தானிய தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த விளையாட்டு செய்தியாளரான ஜேசன் ஃபாக்ஸ் (30) தன்னுடைய 26 வயதான மனைவி சாலி உடன், கிளாஸ் ரன்வேயில் இருந்து 100மீ தூரத்தில் உள்ள தீவுக்கு சென்றுவிட்டு, தங்களுடைய ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக விமானம் தடுமாறியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரையும் உயிர் கவசத்தை அணிந்து கொள்ளுமாறு விமான ஒட்டி அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் விமானத்தை அங்கிருந்த தீவில் இறக்க ஆரம்பித்தார். 4000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் அதிவேகத்துடன் மரத்தில் மோதி தரையில் நிறுத்தப்பட்டது.

இதில் விமானம் பலமாக சேதமடைந்தது. ஆனால் அதிஷ்டவசமாக தம்பதியினர் இருவரும் உயிர்தப்பியுள்ளனர். மாறாக இதில் பயணம் செய்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஜேசன், நல்ல வேலை விமானம் இயந்திரம் பழுதாகி கீழே விழுந்திருந்தால் நாங்கள் பாறைகளில் சிக்கியிருப்போம் அல்லது கடலில் விழுந்திருப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்