18 மாதங்களாக தன் உடலுக்குள் சிக்கியிருந்த இளம்பெண், மீட்ட தாயின் இசை: ஒரு ருசிகர சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அபூர்வ நோய் ஒன்றினால் தன் உடலுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண்ணை அவளது தாயின் இசை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

Miranda 13 வயதாக இருக்கும்போது locked-in syndrome என்ற பிரச்சினையில் சிக்கினாள். மூளையில் திடீரென எற்பட்ட இரத்தப்போக்கினால் கடுமையான தலைவலி, திடீரென்று கேட்கும் திறன் இழப்பு மற்றும் கைகள் செயலிழப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்பட, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Mirandaவுக்கு மிகவும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உயிர் பிழைத்தாலும் அவளுக்கு locked-in syndrome என்ற பிரச்சினை ஏற்பட்டது. அதாவது கோமா போன்ற ஒரு நிலை, ஆனால் அவளால் தன்னைச் சுற்றி நடப்பதை உணர முடியும், பதிலுக்கு ரெஸ்பாண்ட் செய்ய முடியாது.

இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கிய Mirandaவுக்கு அந்த பிரச்சினையிலிருந்து விடுபட 5 சதவிகித வாய்ப்பு மட்டுமே இருந்ததாக மருத்துவரான அவரது தாயான Stella (52) தெரிவிக்கிறார்.

Miranda மருத்துவமனையில் இருக்கும்போது உறவினர்கள் பாட அவரது தந்தையான John (54) கிட்டார் இசைப்பார்.

பிள்ளை செயலற்று இருப்பது மனதை வருந்தச் செய்தாலும் மனம் தளராத Mirandaவின் தாய் அவளது உறவினர்கள் எழுதிய கடிதங்களை வாசித்துக் காட்டுவார். அவற்றைக் கேட்கக் கேட்க Miranda கண்களை சிமிட்டத் தொடங்கினாள்.

திரைப்படங்களில் வருவது போல அவளது கைகள் அசையத் தொடங்கின. மூன்று மாதங்களாக விடாமல் மகளுக்காக தாய் பியானோ வாசிக்க, ஒரு நாள் Miranda தாயுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தாள்.

25 ஆண்டுகளாக நான் மருத்துவராக இருக்கிறேன், இப்படி ஒரு அதிசயத்தை நான் பார்த்ததில்லை என்று கூறும் Mirandaவின் தாய், மகளுக்கு பேச்சுப் பயிற்சி முதல் பல பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்