மேகன் தற்போது 4 மாத கர்ப்பிணி தெரியுமா? ரகசியத்தை காட்டிக்கொடுத்த புதிய வைர மோதிரம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என இணையதளவாசிகள் அவருடைய மோதிரத்தை வைத்து கணித்து கூறியுள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய காதல் மனைவி மெர்க்கலுடன், காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு சிறப்பு வாய்ந்த இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் தங்களுடைய சுற்றுப்பயணத்தை கழித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமையன்று சிட்னியில் சுற்றிப்பார்த்து கொண்டிருந்த மெர்க்கல் தன்னுடைய கையில் புதிய வகை மோதிரம் ஒன்றினை அணிந்திருந்தார்.

அந்த மோதிரத்தில் மூன்று வகையிலான கற்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த மோதிரம் குறித்து இணையதளவாசி ஒருவர், மெர்க்கலின் கையில் இருக்கும் மோதிரத்தில் ஊதா நிறம் ஹரியின் செப்டம்பர் மாத பிறந்தநாள் விழாவை குறிக்கிறது. பச்சை நிறம் மெர்க்கலின் ஆகஸ்டு மாத பிறந்தநாள் விழாவை குறிக்கிறது.

இதில் இரண்டிற்கும் இடையில் இருக்கும் வைரக்கல், ஏப்ரல் மாதத்தை குறிக்கிறது. அதாவது அவருக்கு ஏப்ரல் மாதம் தான் குழந்தை பிறக்கபோகிறது. தற்போது மெர்க்கல் 4 மாத கர்ப்பிணியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்