கர்ப்பிணி மேகன் மெர்க்கல் என்னிடம் அந்த உறுதியை அளித்தார்: மருத்துவர் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் தம்பதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மருத்துவர் ஒருவர் மெர்க்கல் குறித்து பேசியுள்ளார்.

16 நாட்கள் சுற்றுப்பயணமாக இருவரும் அவுஸ்திரேலியா, பிஜி, ஓசியானியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

தற்போது ஓசியானியாவின் டோங்காவில் இருவரும் உள்ளனர்.

நாளை சிட்னிக்கு திரும்பவுள்ளனர். இந்நிலையில் டோங்காவில் ரஷ்யாவை சேர்ந்த நீதிபதி சார்லஸ் கடேவும், அவர் மனைவியான மருத்துவர்கள் மிரியமும் அரச தம்பதியை சந்தித்து பேசினார்கள்.

இது குறித்து மருத்துவர் மிரியம் கூறுகையில், மெர்க்கலிடம் எப்படி உள்ளீர்கள் என கேட்டதற்கு, நலமாக உள்ளேன் என கூறினார்.

ஒரு மருத்துவராக, மெர்க்கல் கர்ப்பமாக இருக்கும் இச்சமயத்தில் அவர் அதிக தூரம் பயணம் செய்வது குறித்து எனக்கு அக்கறை உள்ளது.

நான் இரண்டு குழந்தைகளின் தாய், அந்த உணர்வு எப்படி இருக்கும் என எனக்கு தெரியும்.

உடல்நிலையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் என மெர்க்கலிடம் நான் கூறினேன். அதற்கு, நிச்சயம் கவனித்து கொள்வேன் என அவர் உறுதியளித்தார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்