ஃபிஜி நாட்டில் பாதுகாப்பின்றி தத்தளித்த மேகன் மெர்க்கல்: விளக்கம் கேட்கும் இளவரசர் ஹரி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஃபிஜி நாட்டில் சந்தை ஒன்றில் கூட்டத்தினிடையே இளவரசி மெர்க்கல் தனியாக சிக்கிய விவகாரத்தில் இளவரசர் ஹரி விளக்கம் கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்ப்பிணியான பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் அரசு முறை பயணமாக கணவர் ஹரியுடன் ஃபிஜி நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இதன் ஒருபகுதியாக தலைநகர் சுவாவில் அமைந்துள்ள நெரிசலான சந்தை ஒன்றில் அவர் பார்வையிட சென்றதாக கூறப்படுகிறது.

அதே வேளையில் இளவரசர் ஹரி 30 மைல்கள் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் பார்வையிட சென்றுள்ளார்.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கிய கர்ப்பிணியான மேகன் மெர்க்கல், பாதுகாப்பு வளையத்தில் இருந்து சில நிமிடங்கள் விடுபட்டு தத்தளித்ததாக கூறப்படுகிறது.

சந்தை முழுவதும் மேகன் மெர்க்கலை காண பெருந்திரள் கூடியிருந்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வையில் இருந்து விடுபட்ட அந்த 8 நிமிடங்கள் மேகன் மெர்க்கல் பயத்தில் உறைந்து காணப்பட்டதாகவும் நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 20 நிமிடங்களே அந்த சந்தையில் மேகன் மெர்க்கல் செலவிடுவதாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டிருந்தன.

அதில் 8 நிமிடங்கள் பாதுகாப்பு குளறுபடியால் மேகன் மெர்க்கல் தனியாக தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேகன் மெர்க்கலை நேரிடையாக காணும் பொருட்டு, அந்த சந்தைப்பகுதியில் அப்பகுதி மக்கள் 4 மணி நேரமாக காத்திருந்துள்ளனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாலையே மேகன் மெர்க்கலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், மறைந்த இளவரசி டயானாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த Ken Wharfe தெரிவிக்கையில்,

மெர்க்கலுக்கு அளித்துள்ள பாதுகாப்பானது மிகவும் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ளது.

தனிப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க மேற்கொள்ளப்பட்டும் அடிப்படை அம்சம் கூட அங்கே கடைபிடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மேகன் மெர்க்கலுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பில் இளவரசர் ஹரி தொடர்புடைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பார் என அரண்மனை தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்