ஒருநாளைக்கு 22 மணிநேரம் உறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 22 மணிநேரம் உறங்கிய பெண், அதிக உடல் எடையால் அவஸ்தையடைந்தது பற்றியும், பின்னர் மீண்டும் பழையநிலைக்கு திரும்பி சுவாரஷ்ய நிகழ்வு பற்றியும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த Misé Coakley, 34 என்பவரின் தந்தை ஆர்தர் கோக்லே 61, ஜூன் 2009-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஏர் பிரான்ஸ் ஜெட் விமானத்தில் இறந்துபோனார்.

இதனையடுத்து தானே தன்னுடைய வாழ்க்கையை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால், அயராது தொடர்ந்து ஓய்வின்றி வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் பெரும் மலைஉளைச்சலுக்கு ஆளான Misé-விற்கு திடீரென கடந்த 2010-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மூளைக்காய்ச்சல், தட்டம்மை மற்றும் சிறுநீரக தொற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர்.

5 நாட்களுக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட Misé-விற்கு நல்ல ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், வீட்டில் படுத்தபடுக்கையாக கிடக்க ஆரம்பித்தார். இதனால் நாளொன்றுக்கு அதிகமான உணவு வகைகளை எடுத்து வந்துள்ளார். அதோடு அல்லாமல் தினமும் குறைந்தபட்சம் 22 மணிநேரம் என 2 வருடங்கள் தூங்கியுள்ளார்.

இதன் விளைவாக அவருடைய உடல் எடை 50 கிலோ அதிகரித்திருக்கிறது. உறவினர் ஒருவரின் வீட்டு விழாவிற்கு சென்ற Misé, தன்னுடைய புகைப்படத்தை பார்த்து சோகமடைந்தார்.

மீண்டும் தன்னுடைய உடலை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என அயராது முயற்சி செய்து ஒருவழியாக கடந்த 2017-ம் ஆண்டு அதிகரித்த 50 கிலோ எடைக்கு மேலே குறைத்தார். தற்போது அவருடைய பழைய உடைகள் பெரிதாக இருப்பதால் புதிய ஆடைகளை வாங்கி உடுத்தி வருவதாக Misé கூறியுள்ளார்.

தற்போது உடல்நலன் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை பார்த்தால் தனக்கே ஆச்சர்யமாக இருப்பதாக Misé பெருமிதம் தெரிவிக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers