அப்பாவைக் கொன்றது அம்மாதான், ஆனால் அவர் கொலைகாரி அல்ல: ஒரு மகனின் வாக்குமூலம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்றார், அவர் கொன்றது உண்மைதான், ஆனால் அவர் கொலைகாரி அல்ல என்கிறார் அவரது மகன். Surreyயைச் சேர்ந்த Sally ஒரு நாள் தனது கணவராகிய Richardஐ (61) 20 முறை சுத்தியலால் அடித்துக் கொன்றார்.

கைது செய்யப்பட்ட Sallyக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவர்.

ஆனால் இன்னும் Sallyயின் மகன்களான David மற்றும் James Challen ஆகியோர் தவறாமல் தங்கள் தாயைச் சென்று பார்க்கிறார்கள், ஆவருக்கு பிடித்தவற்றைக் கொண்டு செல்கிறார்கள், அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருகிறார்கள்.

அப்பாவைக் கொன்றது அம்மாதான், ஆனால் அவரை ஒரு கொலைகாரியாக மற்றவர்கள் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் அவரது மகனான David.

15 வயதாக இருக்கும்போதே Richardஐ திருமணம் செய்து கொண்ட Sally, தனக்கென்று எந்த ஆசைகளும் இல்லாமல் கணவனுக்காகவே வாழ வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார்.

தனக்கென்று நண்பர்கள் இருக்கக்கூடாது, இருந்தாலும் பேசக்கூடாது என பல கட்டுப்பாடுகள்.

ஒரு முறை தன்னைப் பார்க்க வந்த ஒரு உறவினரைக் கட்டியணைத்து வழியனுப்பியதற்காக அவரை இழுத்துச் சென்று வன்புணர்வு செய்தார் Richard.

ஒரு பெண்ணுக்கான அடிப்படை மதிப்பு கூட கொடுக்கப்படாமல் ஒரு வேலைக்காரி போல் நடத்தப்பட்டார் Sally.

தினமும் மனோரீதியாக அவரைத் துன்புறுத்தினார் அவரது கணவர். ஒரு கட்டத்தில் வேறு பெண்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தார் Sally.

பின்னர் பாலியல் தொழிலாளிகளுடனும் அவர் சென்று வருவதை அறிந்ததும் அவரை விட்டு தனியாக தனது பிள்ளைகளுடன் வந்து விட்டார்.

அதற்குப் பின்னும் Sallyயை ஏமாற்றி ஒரு சிறிய தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் Richard.

ஒரு நாள் Richardஐப் பார்க்கச் சென்றபோது, கொட்டும் மழைக்கு நடுவில் Sallyயை கடைக்கு அனுப்பியிருக்கிறார் அவர்.

வீடு திரும்பியபோது Sallyக்கு சந்தேகம் ஏற்படவே Richardஇன் போனை எடுத்துப் பார்த்திருக்கிறார், தனது பெண் தோழியை Richard வீட்டுக்கு அழைத்திருப்பது தெரிய வர, ஒன்றும் தெரியாததுபோல் அவருக்கு காலை உணவு தயாரித்துக் கொடுத்து விட்டு, அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சுத்தியலை எடுத்து, அவரது தலையில் தன்னுடைய இத்தனை ஆண்டு கோபத்தை எல்லாம் சேர்த்து 20 முறை அடித்தார் Sally.

தனது தாய் அப்பாவைக் கொன்றுவிட்டார் என்று தெரியவந்தபோது கூட பிள்ளைகளுக்கு அவர் மீது பரிதாபம்தான் ஏற்பட்டதேயொழிய கோபம் வரவில்லை.

ஏனென்றால் அவர் அனுபவித்த அத்தனை கொடுமைகளுக்கும் அவர்கள்தானே சாட்சி. தனது தாய் பரிதாபத்திற்குரியவர், அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அதிகம் என்று கூறும் David, தனது தாயை விடுவிக்க வேண்டும் அன்று கோரி நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers