பிரித்தானியாவில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்: எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம் ஜோடிக்கு 1 மில்லியன் பவுண்ட் பரிசு விழுந்துள்ளதால், அதை அவர்கள் புது வீடு மற்றும் திருமணத்திற்கு பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் Maidstone அருகே இருக்கும் Snodland பகுதியைச் சேர்ந்த ஜோடி Mick Tyler(35)-Sarah Harmer(33). இவர்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் National Lottery-யில் இந்த ஜோடிக்கு £1 மில்லியன் பவுண்ட் பரிசாக விழுந்துள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Mick Tyler ஏர் கண்டிசனிங் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த மாதம் 29-ஆம் திகதி ஆன்லைன் மூலம் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் பின் அவர் தன் அன்றாட வாழ்க்கையை கடந்துள்ளார்.

இதையடுத்து அவர் தன் குடும்பத்தினருடன் டின்னரில் இருந்த போது National Lottery-யில் இருந்து மெயில் வந்துள்ளது.

இதனால் அதை பார்ப்பதற்காக போனை பார்த்த போது சரியான சிக்னல் கிடைக்கவில்லை, அதன் பின் அவர் அப்பாவின் போனை வாங்கி பார்த்த போது, 1 மில்லியன் பவுண்ட் பரிசை (அதாவது இலங்கை மதிப்பில் 22,32,83,294 கோடி ரூபாய்) வென்றுள்ளதாக மெயில் வந்துள்ளது.

இதைக் கண்டு அவரது குடும்பத்தினரும் அவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இருப்பினும் இதை உறுதி செய்வதற்காக வெற்றியாளரை அறிவிக்கும் தொலைக்காட்சியில் செய்தியை பார்த்துள்ளனர்.

இருப்பினும் உரிய நிறுவனத்திற்கு மறுநாள் காலை போன் செய்து உறுதியானவுடன், குடும்பத்தினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் Mick Tyler-Sarah Harmer ஜோடி காதலித்து வந்தாலும், இருவரும் நாம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர். அதாவது 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தற்போது இந்த பரிசின் காரணமாக இருவரும் அடுத்தாண்டு ஏபரல் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் ஆசையாக வாங்க விரும்பிய வீட்டை வாங்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இருவரும் தங்கள் வேலையை விட விரும்பவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers