பிரித்தானியாவைப் புரட்டியெடுக்கும் கால்லம் புயல்: 1000 வீடுகள் இருளில் மூழ்கின

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பலத்த காற்றுகள் மற்றும் கன மழையுடன் கால்லம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவைப் புரட்டியெடுத்து வருகிறது.

போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1000திற்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளன.

மணிக்கு 76 மைல் வேகத்தில் காற்று வீசுவதோடு கன மழையும் பெய்து வருகிறது. Isles of Scilly பகுதி பலத்த காற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளை கால்லம் புயல் துவம்சம் செய்து வருகிறது.

Cornwallஇன் Camborne மற்றும் Pembrokeshireஇன் Milford Haven ஆகிய பகுதிகளில் மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.

பிரித்தானியா முழுவதுமே பெருவெள்ளமும், போக்குவரத்து பாதிப்பும் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென் வேல்ஸின் பல பகுதிகளுக்கு பெரு மழை காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி 36 மணி நேர ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே வேல்ஸின் மீதமுள்ள பகுதிகளுக்கும் வட இங்கிலாந்து மற்றும் தென் ஸ்காட்லாந்தின் பல பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் எச்சரிக்கைகளும் நள்ளிரவு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ட்ஸ்டர், புயலுக்கு தப்பினாலும், இளவரசி யூஜீனின் திருமணத்திற்கு வந்திருந்த பலரும் காற்றை எதிர்கொண்டதோடு, சிலரது தொப்பிகளும் காற்றில் பறந்தன.

தென் கிழக்கு இங்கிலாந்தில் பொதுவாக உலர்ந்த வானிலையே காணப்படும் என்றும், வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers