எத்தனை போராட்டம் வந்தாலும் அவைகளுக்கிடையில் புன்னகைக்க மறக்காத இந்த இளவரசியை தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இன்று பிரித்தானிய இளவரசிகளில் ஒருவரான யூஜீனுக்கு திருமணம். சிறிய இளவரசியாகிய இவருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணமா? மக்கள் வரிப்பணம் இப்படி வீணாக்கப்படுவதா? என ஒரு பக்கம் எதிர்ப்புக்கிடையில் அவரது திருமணம் நடைபெறுகிறது.

ஆனால் இதற்கெல்லாம் யூஜீன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் ஏற்கனவே வாழ்வில் பல துயரங்களை சந்தித்து விட்ட அவருக்கு இது பெரியதாக தோன்றவில்லை போலும்.

ஆம், இளவரசர் ஆண்ட்ரூ அவரது மனைவியாக இருந்த சாராவுக்கு பிறந்தவர் யூஜீன். பெற்றோர்களின் விவாகரத்தைப் பார்க்க வேண்டிய இக்கட்டான சூழல்.

12 வயதில் scoliosis என்னும் வளைந்த முதுகெலும்பு நோய்க்காக பெரிய அறுவை சிகிச்சை.

என்ன செய்தாலும் கேலி செய்யும் ஒரு கூட்டம், இளவரசர் ஹரியின் திருமணத்தில் அவர் அணிந்து வந்த உடையை பலர் கேலி செய்தார்கள்.

பல துயரங்களையும் அவமானங்களையும் கடந்து வந்த போதும், ஏழு வருடங்களாக காதலித்து வந்த தனது காதலரான Jack Brooksbankஐ இன்று மணமுடிக்கும் யூஜீன், ஒரு முறை கூட புன்னகைக்க மறந்ததில்லை.

அதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி எனலாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers