நீ எனக்கு கிடைக்காவிட்டால் வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்: நர்ஸ் மேல் காதல் கொண்ட போர்ட்டர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில் போர்ட்டராக பணிபுரிந்த ஒரு நபருக்கு ஒரு நர்ஸ் மேல் ஒருதலைக் காதல் ஏற்பட்டதால் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுக்க, நீதிமன்றம் அந்த நபருக்கு சிறைத் தண்டனை விதித்தும், தண்டனையை தள்ளி வைத்திருப்பதால், தான் அச்சத்திலேயே வாழ்வதாக தெரிவித்திருக்கிறார் அந்த நர்ஸ்.

Manchester மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணி புரிபவர் Kerrie Clark-Bear. அதே மருத்துவமனையில் போர்ட்டராக பணி புரிந்தவர் Anthony Wells.

18 மாதங்களாக Kerrie மீது ஒருதலைக் காதலாகி அவர் பின்னாலேயே சுற்றினார் Anthony .

ஒரே நாளில் 68 முறை கூட போன் செய்து Kerrieயை டார்ச்சர் செய்தார் அவர். நீ எனக்கு கிடைக்காவிட்டால் வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என்று அவர் Kerrieக்கு செய்தி அனுப்பினார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த Kerrie, கடைசியாக Anthonyமீது புகாரளித்தார். நீதிமன்றம் Anthonyக்கு 16 வாரங்கள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது என்றாலும், அவர் இப்போதைக்கு சிறைக்கு செல்லவில்லை.

அவரை எப்போது சிறைக்கு அனுப்புவது, அல்லது அவர் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால் அவரை சிறைக்கு அனுப்புவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

இவ்வளவு நாள் டார்ச்சருக்குப்பின், Anthony மீது புகாரளித்தும் அவர் சிறைக்கு செல்லாததால், புகாரளித்த தனக்கு எப்போது வேண்டுமானாலும் Anthonyயால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்வதாக தெரிவிக்கிறார் Kerrie.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்