பிரித்தானிய இளவரசி கேட்டின் எளிமை: மனைவியை பின்பற்றும் வில்லியம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், அவர்கள் நினைத்தால் வகை வகையாய் உடைகள் அணியலாம்.

ஆனால் இளவரசி கேட்டுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. ஏற்கனவே ஒரு பிரபல நிகழ்ச்சிக்கு அணிந்த ஒரு உடையில் சில மாற்றங்கள் செய்து இன்னொரு பிரபல நிகழ்ச்சிக்கு அதை அணிவதுதான் அந்த பழக்கம். அவரது வசதிக்கு, ஒரு முறை அணிந்த உடையை திரும்ப அணியத் தேவையே இல்லை.

ஆனால் இன்று பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் கேட்டின் இந்த எளிமை தெரிந்திருக்கிறது, பிடித்தும் இருக்கிறது.

அவர் இவ்வாறு ‘ரீசைக்ளிங்’ செய்து அணியும் உடைகளையும் கவனித்து பத்திரிகைகள் அதை நினைவுகூறுவதோடு அதை ஒரு செய்தியாக்கி புகழவும் செய்கின்றன.

மன நலம் தொடர்பான மாநாடு ஒன்றில் பங்கேற்ற இளவரசி கேட், தான் 2017ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றிருந்தபோது அணிந்திருந்த அதே உடையில் சில மாற்றங்கள் செய்து அணிந்திருந்ததை பத்திரிகைகள் கவனிக்கத் தவறவில்லை.

பிரித்தானிய பத்திரிகைகளில் அந்த ஊதா நிற உடையில் இளவரசி கேட் மின்னும் படங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

பத்திரிகைகள் அதோடு நிற்கவில்லை, இளவரசர் வில்லியமும் அதே நாளில் தான் உடுத்தியிருந்த அதே கோட் சூட்டில் வந்ததைக் கண்டு, இளவரசி கேட் தனது ‘ரீசைக்ளிங்’ பழக்கத்தை வில்லியமுக்கும் பழக்கி விட்டார் போலும் என வேடிக்கையாக எழுதியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers