மாணவிகளின் மாதவிடாய் பிரச்சினைக்காக பிரித்தானியாவில் குரலெழுப்பி சாதித்த கேரள இளம்பெண்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கேரளாவை பின்னணியாகக் கொண்ட ஒரு இளம்பெண் மாணவிகளின் மாதவிடாய் பிரச்சினைக்காக பிரித்தானியாவில் குரல் எழுப்பியிருக்கிறார்.

2017ஆம் ஆண்டில் மட்டும் 1,37,700 மாணவிகள் பிரித்தானியாவில் தங்கள் மாதாந்திர பிரச்சினை காரணமாக வகுப்புகளுக்கு செல்லாமல் இருந்ததாக அறிக்கை ஒன்று தெரிவிகிறது.

அரசோ அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கேரளாவைப் பின்னணியாகக் கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவியான Amika George (18) இதற்கு ஒரு முடிவு கட்ட முடிவு செய்தார்.

ஒரு சாதாரண, உடல் சார்ந்த இயற்கையான ஒரு விடயம் இந்த பெண்களின் கல்வியைத் தடுத்து ஒரு இலக்கை அடைய விடாமல் தடுக்கிறது என்றால், ஆணாதிக்க நாடாளுமன்றமும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றால், அது அநியாயம் என்று கூறும் Amika George, அதற்காக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அது வருவாய் குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவிகளுக்கு இலவச மாதவிடாய்க்கால தயாரிப்புகளை வழங்க வேண்டும் என அரசைக் கோரும் ஒரு ஆன்லைன் கோரிக்கையாக தொடங்கியது.

பின்னர் அது குறித்து எழுதவும், ஊடகங்களில் பேட்டிகள் கொடுக்கவும் தொடங்கினார் Amika George.

செய்தி பரவி விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்க, நாடாளுமன்றம் முன் கூடி கோஷமிடுவது என முடிவு செய்யப்பட்டது.

டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றம் முன் மக்கள் குவியத்தொடங்கினர், 100 அல்ல 200 அல்ல, பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பெண்களுமாய் 2000 பேர் குவிந்தனர்.

அவர்கள் எழுப்பிய குரல் நாடாளுமன்றத்தின் காதுகளில் பளீரென விழுந்தது. ஆம், மாணவிகளும் இளம்பெண்களும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக இலவசமாக மாதவிடாய் தயாரிப்புகளை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

பிரித்தானியாவில் இன்னொரு மாணவியின் கல்வி மாதவிடாயால் தடைபடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்டு ஒரு மாணவியாக இருந்தும், போராடி சாதித்த Amika Georgeக்கு அவர் எதிர்பார்க்காவிட்டாலும் விருதுகள் குவிகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்