லண்டன் தெருக்களில் திடீரென்று கட்டிப்பிடிக்கும் சிறுவர்கள்: வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டன் தெருக்களில் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பவர்களை சில சிறுவர்கள் திடீரென்று கட்டிப் பிடித்துக் கொண்டனர், பணத்துக்காக அவ்வாறு அவர்கள் செய்தது பின்னர் தெரியவந்துள்ளது.

லண்டன் தெருக்களில் சில சிறுவர்கள் சற்று வசதி படைத்தவர்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவர்கள் பணம் தருவது வரை அவர்களை விடாமல் தொந்தரவு செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Ilford பகுதியிலிருந்து இதற்காகவே ஒரு கும்பல் வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஒரு சிறுவன் அல்லது சிறுமியை அனுப்பி விட்டு, பொலிசார் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க சில பெண்கள் அவர்களுக்கு சற்று பின்னாலேயே வருகிறார்கள்.

சிறுவர்கள் ஒருவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு பணம் கேட்க, அவர்கள் விட்டால் போதும் என்று எண்ணும் சிலரும், இரக்கப்பட்டு சிலரும் பணம் கொடுத்ததும், அந்த சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் பின்னால் வரும் பெண்களிடம் கொடுத்து விட்டு அடுத்த நபரை தேடி செல்கின்றனர்.

சிலர் 50 பவுண்டுகள் வரை தருவதைக் கண்டுள்ள பொலிசார், இப்படியே போனால், ஆண்டுக்கு 100,000 பவுண்டுகள் வரை இந்தக் கூட்டம் சம்பாதித்து விடும் போலிருக்கிறது என்று பொலிசார் தெரிவிக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்