தற்கொலைக்கு முன் இளம்பெண் அனுப்பிய மெசேஜால் குழம்பிய பொலிஸார்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் இறுதி மெசேஜ் சிக்கியும் கூட, காரணத்தை கண்டறிய முடியாமல் பொலிஸார் திணறி வருகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைகழகத்தின் குதிரை ரைடிங் மற்றும் போலோ கிளப்பின் முன்னாள் தலைவரான Hannah Daibell (21), கடந்த ஜூலை மாதத்தில் மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.

அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், Hannah தற்கொலைக்கு முன் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்தது.

பின்னர் அவருடைய செல்போனை ஆராய்ந்து பார்த்ததில், Rebello என்பவருக்கு அவர் இறுதியாக மெசேஜ் செய்திருப்பது தெரியவந்தது. அதில், "நீ எதற்காக வேண்டுமானாலும் இங்கு வந்திருக்கலாம். ஆனால் இதற்கு நீ தான் காரணம்" என இருந்தது.

இதுகுறித்து Rebello கூறுகையில், Hannah அனுப்பியிருக்கும் மெசேஜ் எதை வேண்டுமானாலும் குறிக்கலாம். அதற்காக என்னை நினைப்பது தவறு என கூறியுள்ளார்.

இதற்கிடையில் அந்த மெசேஜ் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், Hannah அவருடைய குடும்பத்தாருடன் மட்டுமே அதிக நெருக்கத்துடன் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

அவர் அந்த மெசேஜில் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை. அவர் போதை பொருளை உட்கொண்டதும், அவருடைய மனநிலை, மனச்சோர்வு மற்றும் கவலைகள் காரணமாக அந்த வார்த்தைகள் வந்திருக்கலாம்.

அப்படி இல்லையென்றால் தன்னுடைய நிலை பற்றி யாருக்காவது தெரியப்படுத்த விரும்பியிருக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்