பிரித்தானியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நகரம் எது தெரியுமா? அவர்கள் சொன்ன காரணம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பகுதி எது என்று ஓஎன்எஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த ஆய்வு கடந்த ஏப்ரல் மாதம் 2017-ஆம் ஆண்டிலிருந்து இந்தாண்டு மார்ச் மாதம் வரை எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பிரித்தானியாவின் Hampshire நகரத்தின் Rushmoor பகுதியிலே மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 10-ல் 8.4 மதிப்பெண் பெற்று Rushmoor முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 2016/17-ல் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பகுதியான யார்க்‌ஷயரின் Craven பகுதியை இது பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு Craven 10-க்கு 7.8 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

அதாவது Rushmoor-ல் அதிகபட்சமாக மக்கள் வாழபயனுள்ள இடம் என்று கூறியுள்ளனர். அதாவது 10-ல் 8.7 கிடைத்துள்ளது. அதே சமயம் மக்கள் மகிழ்ச்சிய குறைவாக இருக்கும் பகுதியாக Nottinghamshire-ல் உள்ள Broxtowe-ஐ கூறியுள்ளனர். இந்த நகரம் 10-க்கு 7.1 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி பெரும்பாலான மக்கள் Wales பகுதியை நிம்மதி மற்றும் வாழபயனற்ற இடம் என்று கூறியுள்ளனர்.

மக்களிடம் நீங்கள் இருக்கும் பகுதியில் திருப்தியாக இருக்கிறீர்களா? எந்தளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று உணர்கிறீர்கள்? எந்த பகுதியில் இருக்க ஆர்வமாக உள்ளீர்கள் போன்ற கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்பட்டுள்ளது, அதன் அடிப்படையிலே இதன் முடிவுகளை ஒஎன்எஸ் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்