நோயாளியின் காயத்தை பொறுக்க முடியாமல் செவிலியர் எடுத்த விபரீத முடிவு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் நோயாளியின் காயத்தை பார்த்து அதிகமான மனஅழுத்தம் ஏற்பட்டதால் பணியில் சேர்ந்த புது செவிலிய பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லண்டனின் மான்செஸ்டர் பகுதியில் இயங்கி வரும் Manchester Royal Infirmary மருத்துவமனையில் கடந்த 2016-ம் பணிக்கு சேர்ந்தவர் Clara Malagon (22). இவர் கடந்த ஜூலை மாதம் திடீரென வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

அவருடைய இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய தந்தை Ignacio Malagon-டம் நடத்தப்பட்ட விசாரணையில், என்னுடைய மகள் கல்லூரியில் படிக்கும்பொழுது ஒருமுறை திடீரென அழ ஆரம்பித்தார்.

என்ன நடந்தது என விசாரித்த போது, அவர் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. வீட்டிலும் அவர் தனியாக அடிக்கடி அழ ஆரம்பித்தார்.

இதெல்லாம் கூடிய சீக்கரம் சரியாகிவிடும். பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என நான் கூறினேன்.

ஆனால் அவள் தொடர்ந்து அதே மனநிலையில் இருந்ததால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு அனுப்பி வைத்தேன். பின்னர் சில நாட்கள் அவளுடை செய்கையில் மாற்றம் தெரிந்தது.

அப்பொழுது தான் மான்செஸ்டர் பகுதில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று இரவு நேர பணியில் என்னுடைய மகள் ஈடுபட்டிருந்ததால், சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அவர் தான் மருத்துவ உதவிகள் செய்து வந்தார்.

இதனால் மீண்டும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். என்னிடம் பேச நிறைய முறை முயற்சி செய்தார். ஆனால் நான் தான், என் மகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்காமல் இருந்துவிட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்