உலக தலைப்பு செய்திகளில் வந்த பிரித்தானிய இந்தியருக்கு தற்போது நேர்ந்த சோகம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய ராணியின் மெய்க்காவலர்கள் படையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்தியர், போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சரன்ப்ரீத் சிங் லால் (22) தன்னுடைய குழந்தை பருவத்திலே பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு குடி பெயர்ந்து விட்டார்.

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் மெய்க்காவலர் படையில் கடந்த 2016-ம் ஆண்டு சேர்ந்த சரன்ப்ரீத் சிங், கடந்த ஜூன் மாதத்தில் சீக்கியர்கள் மட்டுமே அணிந்து கொள்ளக்கூடிய தலைப்பாகையை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதனையடுத்து அவர் உலகம் முழுவதுமுள்ள செய்தி ஊடங்களில் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தார். இதுகுறித்து பேசிய அவர், எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் வரலாற்றை மாற்றிவிட்டேன்.

இனிமேல் சீக்கியர்கள் மட்டுமில்லை, ஒவ்வொரு மதத்தினரும் தங்களுடைய அடையாளத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம் என கூறினார்.

இந்த நிலையில் மெய்க்காவலர் படையின் தலைவர் பிரிகேடியர் கிறிஸ்டோபர் கோலெஸ் கூறுகையில், கடந்த மார்ச் மாதத்தில் ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில், வீரர்கள் சிலர் போதை பொருட்களை எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சரன்ப்ரீத் சிங் சிக்கியுள்ளார். இதனால் அவர் தற்போது பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் தொடர்புடைய அனைவருமே பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்