அக்காவின் திருமணத்தில் குடித்துவிட்டு மோசமாக நடந்துகொண்ட தங்கை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில்தனது அக்காவின் திருமணத்தின்போது குடித்துவிட்டு கலாட்டா செய்த தங்கை கைது செய்யப்பட்டு அபராதம் செலுத்தியதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Caitlin Haston என்ற 19 வயது மாணவி தனது அக்காவின் திருமணம் Soughton Hall - இல் நடைபெற்றபோது அங்கு கலந்துகொள்வதற்காக சென்றிருந்துள்ளார்.

திருமணத்தின்போது குடித்துவிட்டு இவர் கலாட்டா செய்துள்ளார். மேலும், திருமணத்திற்கு இடையூறாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஹொட்டல் ஊழியர்களுடனும் பிரச்சனை செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஹொட்டலுக்கு வந்த பொலிசார் இவரிடம் விசாரணை நடத்தியபோது பொலிசாரை கெட்ட வார்த்தையால் திட்டியதோடு மட்டுமல்லாமல், ஒரு பொலிசை எட்டி உதைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு இவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்