லண்டனில் உள்ளாடையில் இளம் பெண் மறைந்து வைத்திருந்த பொருள்! நீதிமன்றத்தில் சொன்ன காரணம்

Report Print Santhan in பிரித்தானியா

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளாடை மற்றும் உடலின் முக்கிய பகுதியில் கொக்கைன் மற்றும் போதை பொருட்களை மறைத்து வைத்து வந்ததால், அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் Glasgow பகுதியைச் சேர்ந்தவர் Lauren Carson. 31 வயதான இவர் லண்டனுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ளார்.

அப்போது அவரை மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் பின் தொடர்வதை கண்ட அங்கிருந்த அதிகாரிகள், அவரை மறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவரது வாயில் ஏதோ ஒன்று இருப்பதை அறிந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை சோதனை செய்த போது, உள்ளாடையில் கொக்கைன் மற்றும் போதை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி சிக்கிவிடக் கூடாது என்பதற்காக மர்ம உறுப்பில் சுமார் 53-க்கும் மேற்பட்ட கொக்கைனை மறைத்து வைத்துள்ளார்.

இதனால் அதிகாரிகள் இது குறித்து அவரிடம் கேட்ட போது, இது நான் தனக்கு பயன்படுத்தி கொள்வதற்காக அதிகமாக வாங்கியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வழக்கு நடந்து வந்துள்ளது.

அப்போது அவரிடம், நீங்கள் உங்கள் தனிப்பட்ட காரணத்திற்காக அதை வைத்திருந்தால் ஏன் மறைத்து வைத்திருந்தீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் லண்டன் வீதியில் Class A வகை போதை மருந்துகள் கிடைக்காது என்ற காரணத்தினால் மறைத்து வைத்தேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதன் பின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்