பிரித்தானியாவில் கணவனை பறிகொடுத்த பெண்ணிடம் செவிலியர் சொன்ன வார்த்தை! அவர் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கணவன் மறைவால் அதிர்ச்சியான பெண், அவரின் வாழ்வை உடல் உறுப்பு தானம் மூலம் அற்புதமான வழியில் பாதுகாத்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த தம்பதி Seb-Hollie Tresize. இந்த தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 11-ஆம் திகதி Seb-க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரண்டு தினங்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து Hollie Tresize கூறுகையில், கணவன் இறந்த பின்னர் அங்கிருக்கும் செவிலியர் ஒருவர் வந்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்தால், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றலாம் என்று கூறினார்.

அதன் பின் நான் அதற்கு ஒத்துழைத்தேன், இந்த முடிவால் மூன்று பேரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது, அவர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்கு முழு காரணம் நான் இல்லை, உண்மையில் நன்றி கூற வேண்டும் என்றால் Seb-க்கு தான் கூற வேண்டும். 30 வயது பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, 60 வயது நபருக்கு கல்லீரல் மற்றும் 50 வயது நபருக்கு கிட்னி என மாற்றப்பட்டது.

இதன் மூலம் நான் என் Seb-ன் உடலை பாதுகாத்துள்ளேன் என்று உணருகிறேன். இறந்து பலருக்கும் உயிர் கொடுத்திருக்கும் அவனை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்