இந்தியாவுக்கு எப்போது வருவீர்கள்? பிரித்தானியாவில் உள்ள விஜய் மல்லையா அதிரடி பதில்

Report Print Raju Raju in பிரித்தானியா

விஜய் மல்லையாவிடம் இந்தியாவுக்கு எப்போது வருவீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுபற்றி நீதிபதி தீர்மானிப்பார் எனப் பதிலளித்துள்ளார்.

பல்வேறு வங்கிகளிடம் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நேற்று அவர் கண்டுகளித்தார்.

அப்போது எப்போது இந்தியாவுக்கு வருவீர்கள் எனச் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு, அது குறித்து நீதிபதியே தீர்மானிப்பார் எனப் பதிலளித்தார்.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்