கணவரை தேடி தர்மசங்கடமான நிலைக்கு ஆளான இளவரசி மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

விக்டோரியா அரண்மனையில் நடைபெற்ற Hamilton இசை நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

இதில், இசை பண்பாட்டாளர்களுக்கு விருது வழங்கியதோடு மட்டுமல்லாமல் இளவரசர் ஹரியும் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

விழா முடிவில் அனைவரும் குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர், அப்போது இளவரசர் ஹரி தனது மனைவிக்கு பின்னால் நின்றிருந்துள்ளார். இதனை கவனிக்காத மெர்க்கல், அனைவர் முன்னிலையிலும் என் அன்பை நீங்கள் பார்த்தீர்களா? என இளவரசர் ஹரியை தேடியுள்ளார்.

இதற்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆஹா என கூற இக்கட்டான சூழ்நிலையை சமாளித்துள்ளார் மெர்க்கல். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்