லண்டன் புதுமணத்தம்பதியினரின் மகிழ்ச்சி தருணம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த புதுமணத்தம்பதியினர் ரூ.3 லட்சம் செலவு செய்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்து தங்கள் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

லண்டனை நாட்டை சேர்ந்த பொறியாளர் கிரகாம் வில்லியம் லியன் (30), போலந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சில்வியா பிலாசிக் (27) ஆகிய இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு வெளிநாடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதில், யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணிக்க விரும்பி, ரயில்வே டூரிஸம் (ஐஆர்சிடிசி) மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு ரயிலில் பயணம் செய்ய ரூ.3 லட்சம் பணம் செலுத்தி முன் பதிவு செய்திருந்தனர்.

அதன்படி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்த இவர்கள், நீராவி மூலம் இயங்கும் மலை ரயிலின் சிறப்புகளை கேட்டறிந்தனர். அவர்களுக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலைய அதிகாரி வேதமாணிக்கம் விளக்கி கூறினார்.

இந்தியாவில், யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் அழகான அமைதியான நாடாக இந்தியா திகழ்கிறது என புதுமணத்தம்பதியினர் கூறியுள்ளனர்.

பின்னர் இருவரும் சிறப்பு ரயில் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்