பிறந்தநாளில் திடீரென கண்விழித்த கோமாவில் இருந்த மகன்: பெற்றோரிடம் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தை சேர்ந்த இளைஞர் பாலத்திலிருந்து கீழே விழுந்து கோமாவில் இருந்த நிலையில் பிறந்தநாளன்று கண்விழித்து பெற்றோரிடம் பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷான் துன்வர்த் என்ற இளைஞர் கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்த போது அங்குள்ள சிட்னி ஹார்பர் பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.

மருத்துவமனையில் இருந்த ஷானுக்கு துணையாக அவரின் பெற்றோர்களான ஸ்டீவன் மற்றும் கரீன் இருந்தனர்.

தங்களின் மகன் எப்போது கண் விழிப்பான் என ஏக்கத்தோடு பெற்றோர் காத்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஷானுக்கு 21-வது பிறந்தநாள் வந்தது.

மகன் கண்விழிப்பானா என தெரியாத நிலையில் ஷான் இருந்த அறையை பிறந்தநாளன்று பெற்றோர் சிறப்பாக அலங்கரித்தனர்.

இதையடுத்து திடீர் அதிசயமாக ஷான் கண்விழித்து பெற்றோரை பார்த்துள்ளார். அப்போது ஐ லவ் யூ என அவர்களிடம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பின்னர் ஸ்டீவன் மற்றும் கிரீன் தங்கள் அன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர். தற்போது ஷானின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஷானின் மருத்துவ செலவுகளுக்காக அவரின் நலம்விரும்பிகள் நடன நிகழ்ச்சி நடத்தி பணம் சேகரிக்கிறார்கள்.

இதோடு Go Fund Me பக்கம் மூலமும் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்