இளவரசி டயானா மரணத்தின் கடைசி பரபரப்பான 24 மணிநேரத்தில் நடந்தது என்ன?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

மக்களின் இளவரசி என அழைக்கப்பட்ட டயானா 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

இன்றுடன் அவர் இறந்து 21 ஆண்டுகள் கடந்துவிட்டது.

இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். கோடீஸ்வரரான தனது காதலர் டோடி ஃபயீத்துடன் இணைந்து இவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றது, காதலர் டோடியின் கரு டயானாவின் வயிற்றில் வளர்ந்தது தான் டயானாவின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது.

டயானாவின் மரணம் ஒரு விபத்தால் நடந்தது அல்ல. இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

அரச குடும்பத்து ரகசியங்கள் அனைத்தையும் டயானா தெரிந்துவைத்திருக்கிறார், அதுமட்டுமின்றி அரச குடும்பத்தில் இருந்து விலகி சென்றவர் வேறொரு நபரின் கருவை வயிற்றில் சுமப்பதால் அது காலப்போகில் அரச குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே இளவரசர் பிலிப்பின் உத்தரவின் பேரில் டயானா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்துக்கு பின்னர் பாரீசில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் மருத்துவமனைக்கு டயானாவை தூக்கி வந்தபோது அவரது வயிற்றை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் டயானாவின் வயிற்றினுள் 6 – 10 வார கருவினை கண்டதாக மருத்துவமனை குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர்.

டயானா இறந்த கடைசி 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி மதியம் 1 மணி: டயானாவும் அவரது காதலர் டோடியும் தனிவிமானம் மூலம் சார்டினியாவில் இருந்து பாரீஸிற்கு வந்தனர்.

டோடியின் தந்தையும், எகிப்திய தொழிலதிபருமான Mohammed Al-Fayed-யின் Ritz ஹொட்டலுக்கு இருவரும் சென்றனர்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி மாலை 7.00 மணி: ஹொட்டலில் இருந்து வெளியேறி டோடியின் குடியிருப்புக்கு இருவரும் சென்றனர். இவை புகைப்படக்காரர்களால் கவனிக்கப்பட்டன. பின்னர் உணவருந்துவதற்காக உணவகத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டனர், ஆனால் புகைப்படக்காரர்கள் இவர்களை பின் தொடர்ந்தனர்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி இரவு 9.30 மணி: புகைப்படக்காரர்களை தவிர்ப்பதற்காக மீண்டும் Ritz ஹொட்டலுக்கு சென்று இரவு உணவை அருந்தியுள்ளனர். இரவு உணவை முடித்தபின்னர், டோடியின் குடியிருப்புக்கு மீண்டும் செல்ல திட்டமிட்டனர்.

ஆகஸ்ட் 31 ஆம் திகதி அதிகாலை 12.30 மணி: ஹொட்டலின் வாசலில் நின்றுகொண்டு புகைப்படக்காரர்கள் இவர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனால் ஹொட்டலின் பின்பக்க வாசல் வழியாக இவர்கள் சென்றுள்ளனர்.

ஆனால், இதனை கவனித்த புகைப்படக்காரர்கள் விடாமல் பின்தொடர்ந்தனர். இவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கார் ஓட்டுநர் காரை வேகமாக ஓட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 31 ஆம் திகதி அதிகாலை 01.20 மணி: சுரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா – டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கினர். இதில் டோடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த டயானாவை பாரீஸில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்