பட்டப்பகலில் பர்மிங்காமில் நடந்த சம்பவம்: பொதுமக்களை பதற வைத்த காட்சி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் பர்மிங்காமில் பட்டப்பகலில் கத்தியால் நபர் ஒருவரை இளைஞர் ஒருவர் தாக்கச் சென்ற காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்மிங்காமில் வாகன சாரதி ஒருவருடன் இன்னொரு வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் காரில் இருந்து வெளியே வந்த அந்த நபரை குறித்த இளைஞர் தம்மிடம் இருந்த கத்தியை உருவி தாக்கும் நோக்கத்தில் துரத்தியுள்ளார்.

இதனிடையே அந்த காரில் இருந்து வெளியே வந்த பெண் ஒருவர் இந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசருக்கு தகவல் அளியுங்கள் என பொதுமக்களை பார்த்து கதறியுள்ளார்.

இந்த காட்சிகளை படமாக்கிய டாக்ஸி சாரதி ஒருவர், அச்சத்தில் உறைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

கத்தி வைத்திருந்த இளைஞருக்கு கடந்து செல்ல சாலையில் போதுமான இடம் இருந்தும், வேண்டும் என்றே மோதலில் ஈடுபட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் இருவரும் வாகனங்களின்வெளியே வந்து கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதே பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திடீரென்று ஒருவர் கத்தியை உருவி தாக்க முயன்றதும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் உயிருக்கு அஞ்சி ஓட்டமெடுத்துள்ளார்.

குறித்த சம்பவத்தை படம் பிடித்துள்ள டாக்ஸி சாரதி, பொலிசாரிடம் இந்த காணொளியை ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்