பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு பின் நின்று இளம்பெண் செய்த செயல்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

விக்டோரியா அரண்மனையில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது, இளவரசர் ஹரியின் பாடல் திறமையை பார்த்து இளம்பெண் ஒருவர் வியந்து பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மெர்க்கல், அலெக்சாண்டர் ஹாமில்டன் வாழ்க்கையினை மையமாக வைத்து லின்-மானுவல் மிராண்டாவால் உருவாக்கப்பட்ட இசைநிகழ்ச்சியில் நேற்று இரவு பங்கேற்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் Botswana மற்றும் Lesotho நகரங்களில் ஹெச். ஐவி மற்றும் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் மன ஆரோக்யத்திற்காகவும், அவர்களின் நல்வாழ்வை ஆதரிக்கும் விதமாக தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தபட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது, இளவரசர் ஹரி You'll Be Back என்ற பாடலை பாட ஆரம்பித்தார். இதனை பார்த்த அனைவரும் ஹரியை உற்சாகமூட்டும் விதமாக கைதட்டி பாராட்டினார். ஆனால் அவருக்கு பின் பக்கமாக நின்று கொண்டிருந்த Rachel John என்ற உற்சாக மிகுதியில் பிரமிப்பான ரியாக்சன் ஒன்று கொடுத்துள்ளார்.

அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள Rachel John, "நேற்று இரவு எனக்கு ஒரு காவியமாக இருந்தது. இளவரசர் ஹரிக்கு பின்னாடி இருப்பவர் நான் தான் என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் Rachel-ற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்