தவமிருந்து பெற்ற பிள்ளையை பால்வினை நோய்க்கு பறிகொடுத்த பெண்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பத்து மாதம் தவம் போல் வயிற்றில் சுமந்த பிள்ளையை பத்தே நாட்களில் பறி கொடுத்திருக்கிறார் ஒரு பெண்.

அதற்கு காரணம் அவருக்கு இருந்த பால்வினை நோய்.

பிரித்தானியாவின் Prestwich ஐச் சேர்ந்த Kira Aldcroft (22) என்னும் பெண் HSV2 என்னும் வைரஸால் ஏற்படும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அவருக்கு அந்த நோய் இருப்பது அவருக்கு தெரியவில்லை.

தான் கர்ப்பமாக இருந்த போதா அல்லது அதற்கு முன்பா தனக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது என்பது தனக்கு நினைவில்லை என்று கூறும் Kira தாயாவதற்கு எப்போதுமே ஏங்கியதாகவும் Leo என்னும் அழகு குட்டி தேவதூதன் வந்து பிறந்தபோது தன் கனவு நனவானது போல இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.

அவரது மகனான Leo Aldcroft பிரசவ நாளுக்கு 9 நாட்களுக்கு முன்பே பிறந்தான்.

அவனது பிறப்பு குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நேரத்தில் பிறந்த எட்டாவது நாள் அவனது வாயிலிருந்து திடீரென இரத்தம் வடிய ஆரம்பித்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனுக்கு HSV2 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர்தான் Kira வுக்கு அந்த நோய் இருந்ததும், பிரசவத்தின்போது அது குழந்தைக்கு தொற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தவமிருந்து பெற்ற குழந்தையைப் பறி கொடுத்த Kira, இப்போது மற்ற தாய்மார்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை சொல்கிறார்.

பிரசவ காலத்தின்போது இதர மருத்துவ பரிசோதனைகள் செய்வதுபோல, HSV2 வைரஸ் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதையும் சோதித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்