இரண்டு பெண்களின் வாய்ச்சண்டையால் களேபரமாக மாறிய லண்டன் ரயில்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் இருந்து பர்மிங்காம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், அடிதடி சண்டையில் முடிந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று காலை லண்டனில் இருந்து பர்மிங்காம் நோக்கி Chiltern ரயில் சென்றுகொண்டிருந்துள்ளது.

ரயிலில் மஞ்சள் நிறத்திலான ஆடை அணிந்த பெண், கருப்பு உடை அணிந்திருக்கும் பெண் மீது சான்டவிஜை தூக்கி இருந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கருப்பு உடை அணிந்த பெண், என்னுடைய தலையில் இருக்கும் செயற்கை முடியை எடுக்க வைக்காதே. அப்படி என்னை எடுக்க வைத்தால், உன்னை பயங்கரமாக குத்துவேன் என பேச்சை ஆரம்பிக்கிறார்.

இதற்கு மஞ்சள் நிற உடைந்திருந்த பெண்ணும் பதில் பேசவே, இருவருக்கு மிடையே கைகலப்பு ஏற்படுகிறது.

இதற்கிடையில் அந்த இடத்தில் பயணித்த பயணிகள், சண்டை வரவிருப்பதை முன்கூட்டியே அறிந்து இடத்தை காலி செய்கின்றனர்.

இருபெண்களால் பேச்சு வார்த்தையில் ஆரம்பித்த சண்டை, பெரிய களேபரமாகவே மாறிவிடுகிறது. ஒருபுறம் இரண்டு பெண்களும் சண்டையிட மறுபுறம், அவர்களின் காதலர்கள் இருவரும் புரண்டு சண்டை போடுகின்றனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர் ஒருவர், இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து வைரலாக பரவியது.

இதுகுறித்து லண்டன் பொலிஸார் தரப்பில் கூறுகையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வீடியோவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை. யாரேனும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்