இத்தாலியில் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த பிரித்தானிய இளைஞர்கள்: வேட்டையாடும் பொலிசார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இத்தாலி நாட்டின் தலைநகரில் உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னம் அருகே நிர்வாண புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை அங்குள்ள பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இத்தாலியின் ரோமா நகரில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற Altare della Patria என்ற போர் நினைவுச்சின்னம்.

இதில் இரண்டு பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் ஆபாசமாக புகைப்படத்திற்கு போஸ் அளித்துள்ளனர். அதில் ஒருவர் தமது உள்ளாடையை கழற்றி எஞ்சிய சுற்றுலாப்பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளார்.

ஆனால் அங்கு குழுமிய கூட்டம் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் மேற்கொண்ட அருவருக்கத்தக்க செயலை தங்கள் மொபைல்களில் படம் பிடித்துள்ளனர்.

தற்போது இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை இத்தாலிய பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த போர் நினைவுச்சின்னமானது ஒருங்கிணைந்த இத்தாலியின் முதல் அரசரான இரண்டாம் விக்டர் இம்மானுவேல் என்பவரின் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.

இத்தாலியில் சுற்றுலாப்பயணிகள் இதுபோன்ற அருவருப்பான செயற்பாட்டில் ஈடுபடுவது இது முதன் முறையல்ல.

பலர் பெருந்தொகை அபராதமாகவும் செலுத்தியுள்ளனர். சிலர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்