தரையிலிருந்து 1400 அடி உயரத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு, 1400 அடி உயரத்தில் ராணுவ ஹெலிகாப்டரிலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தின் Penzance பகுதியை சேர்ந்த Alicia MacDonald என்று கடந்த சனிக்கிழமையன்று, தன்னுடைய தோழி ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக, ஐஸ்லாந்து தீவிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஆனால் அங்கு மருத்துவச்சி யாரும் இல்லாத காரணத்தால், உடனடியாக கடலோர காவல்படையினர் தென் மேற்கு ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து Newquay-யை சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தீவை வந்தடைந்தது. உடனடியாக Alicia மற்றும் அவருடைய கணவர் Sandy-யும் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டனர். தரையிலிருந்து விமானம் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களிலேயே Alicia-விற்கு பிரசவ வலி அதிகமானது.

இதனையடுத்து Alicia 1400 உயரத்தில் ஹெலிகாப்டரிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் Royal Cornwall Hospital-ல் ராணுவ விமானம் சேர்த்துவிட்டது.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து Alicia கூறுகையில், நானும் எனது மகன் Torran MacDonald-உம் நலமாக உள்ளோம். தகுந்த சமயத்தில் உதவிய கடலோர காவல்படையினர், ராணுவ விமான ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து கடலோர காவல்படையினர் கூறுகையில், ராணுவ ஹெலிகாப்டரில் குழந்தை பிறப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதேபோன்று குழந்தை பிறந்துள்ளது என கூறினார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்