14 வயது சிறுவன் மீது பாலியல் புகார் கூறிய பெண்: சரியான பதிலடி கொடுத்த நீதிமன்றம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

14 வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் புகார் கூறிய பிரித்தானிய பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் சரியான பதிலடி கொடுத்துள்ளது.

Murtonஐச் சேர்ந்த Mandy Stubbs அளவுக்கு மீறி குடித்து விட்டு குடிபோதையில் ஒரு 14 வயது பள்ளிச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பின்னர் அந்த சிறுவன் தன்னை துஷ்பிரயோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

பின்னர் நடைபெற்ற விசாரணையில் Mandyதான் அந்த சிறுவனிடம் தவறாக நடந்தது தெரிய வந்துள்ளது.

அளவுக்கு மீறிய குடிபோதையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டதும் நடந்த சமபவம் அவருக்கு சரியாக நினைவிலேயே இல்லை என்பதும் தெரிய வந்தது.

சிறைத்தண்டனை பெற்றுள்ளதோடு Mandy இனி வாழ்நாள் முழுவதற்கும் ஒரு பாலியல் குற்றவாளி என பதிவு செய்யப்படுவார்.

குடிபோதை, Mandyயை முறை தவறிய உறவில் ஈடுபடுத்தியதோடு வாழ்நாள் முழுமைக்கும் அவருக்கு அவப்பெயரையும் பெற்றுத் தந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்