பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பொலிஸ்! ஆத்திரமடைந்த பொதுமக்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை கைது செய்யும் போது, ஆண் பொலிஸ் ஒருவர் கன்னத்தில் ஓங்கி பளார் என அறையும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் lancashire பகுதியில் கலகத்தை ஏற்படுத்தும் விதமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி, 14 வயது சிறுமியும், 52 வயதுள்ள பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைது செய்யும்போது காயம் ஏற்பட்டதாக, இரண்டு பொலிஸார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 14 வயது சிறுமியை கைது செய்யும்போது ஆண் பொலிஸார் திடீரென சிறுமியின் கன்னத்தில் பளார் என ஓங்கி அறைகிறார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த சிறுமியை விட்டு செல்லுமாறு பொலிசாரை நோக்கி சத்தமிடுகின்றனர். அதில் ஒருவர், உங்களுக்கு நிச்சயம் வேலை பறிபோகும் என சத்தமிடுகிறார்.

இந்த நிலையில் வீடியோ குறித்து பொலிஸார் தரப்பில் தெரிவிக்கும் பொழுது, கைது செய்யப்படும்போது சம்மந்தப்பட்ட சிறுமி பெண் பொலிசாரின் கையை கடித்ததோடு, ஆண் பொலிஸாரின் முகத்தில் கையால் கீற முயன்றுள்ளார் என கூறியுள்ளனர். மேலும் வீடியோ குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்