தத்துக் கொடுத்த தாயைத் தேடி 5000 மைல்கள் பயணித்த இலங்கை பெண்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கர்ப்பமாக இருந்த போது தனது காதலியைக் தவிக்க விட்டுச் சென்றான் ஒரு மனிதன்.

அந்த குழந்தையை பெற்றெடுத்து அதை வளர்க்க வசதியில்லாததால் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு தத்துக் கொடுத்தாள் அந்த தாய்.

மூன்று மாதங்கள் தன் குழந்தையை நினைத்து கண்ணீர் விட்டாள், ஸ்காட்லாந்தில் வளர்ந்த அந்த குழந்தை Inverness என்னுமிடத்தில் வளர்ந்தது.

ஸ்காட்லாந்தில் வளர்ந்தாலும் தன் மனது தன் சொந்த நாட்டை தேடி அலைந்ததை உணர்ந்தாள் அந்தப் பெண். தனது தாயின் ஒரு புகைப்படத்துடன் அவளை தேட ஆரம்பித்தாள் அவள்.

Ria Sloan (26) என்னும் அந்தப் பெண் பிரபல தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியால் சமீபத்தில் தன் தாயைக் கண்டுபிடித்துள்ளார்.

மூன்று வாரக் குழந்தையாக தத்துக் கொடுக்கப்பட்ட Ria இப்போது 26 வயது பெண்ணாக நிற்கிறார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின் தனது குடும்பத்தைப் பார்க்கப்போகிறோம் என்னும் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், தன் குடும்பம் தன்னை ஏற்றுக் கொள்ளுமா என்னும் பயம் தனக்கு இருந்ததாக தெரிவிக்கிறார் Ria.

இலங்கைக்கு வந்த பிறகுதான் தன்னை தன் தாய் எதனால் தத்துக் கொடுத்தார் என்ற உண்மை தனக்கு தெரிய வந்ததாகவும், தான் பயந்தது போல அவர்கள் தன்னை மறக்கவில்லை என்றும் எப்போதும் அவர்கள் தன்னை நினைவு கூருவதையும் தன்னைக் குறித்து கரிசனையுடையவர்களாயிருப்பதையும் அறிந்த போது தன் பயம் தவறானது என்பதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறார் Ria.

தன் தாயை சந்தித்த Ria, தனது தாயை தான் அறியவில்லை என்பதை நினைத்தும், தன் தாய் உயிரோடு இருப்பாரா என்பதை அறியாமலும் ஒரு வேதனை தனக்கு எப்போதும் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

இந்த உறவு இனி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது, என்றாலும் நான் இனி இலங்கைக்கு திரும்பி வருவேன் என்று கூறும் Ria, ஸ்காட்லாந்திற்கும் இலங்கைக்கும் நடுவில் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் இருந்தாலும் இப்போது இரண்டு நாட்டிற்கும் சொந்தமானவள் தான் என்பது போல் உணர்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்