அவர் என்னை துஸ்பிரயோகம் செய்துவிட்டார்: பிரபல கால்பந்து வீரர் மீது மொடல் அழகி புகார்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர், பிரான்ஸ் மொடல் அழகியை வலுக்கட்டாயமாக துஸ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் உள்ளுர் கால்பந்து போட்டிகளில் விளையாடி வரும் கால்பந்தாட்ட வீரர் ஒருவர், போதையில் இருக்கும்போது தன்னை வலுக்கட்டாயமாக துஸ்பிரயோகம் செய்துவிட்டதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மொடல் அழகி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டன் நகரில் உள்ள Mayfair என்று இரவு நேர கேளிக்கை விடுதிக்கு என்னுடைய நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கு தான் நான் அந்த கால்பந்தாட்ட வீரரை பார்த்தேன்.

அந்த வீரருடன் அவருடைய நண்பர் ஒருவரும் உடன் இருந்தார். நாங்கள் எல்லாரும் மது அருந்திய நிலையில், நானும் அந்த வீரர் மட்டும் சிறிது நேரம் நடனமாடினோம். அப்பொழுது திடீரென நான் வாந்தி எடுத்துவிட்டேன். எனக்கு உடல்நிலை சரியில்லாததை உணர்ந்த நான் அங்கிருந்து கிளம்பலாம் என முடிவு செய்து விடைபெற்றேன்.

அன்று நடுஇரவில் நான் விழித்து பார்க்கும்பொழுது, அந்த கால்பந்து வீரரும், அவருடைய நண்பரும் என்னுடைய அறையில் எனது அருகே படுத்திருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் அவர்களை தள்ளிவிட முயற்சி செய்தேன்.

போதையில் உடலில் போதுமான அளவு சக்தி இல்லாததால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பின்னர் விடிந்ததும் நான் என்னுடைய நண்பர்களிடம் நடந்தவற்றை கூறினேன். பின்னர் அவர்களின் உதவியுடன் பொலிஸாரிடம் புகார் அளித்தேன் என கூறியுள்ளார்.

தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால் வழக்கு குறித்து எந்த கருத்துக்களும் தெரிவிக்க முடியாது என பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்