பேரக்குழந்தைகள் உள்ள நிலையிலும் தனது முதல் காதலனை திருமணம் செய்யவிருக்கும் 79 வயது பாட்டி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனில் பேரக்குழந்தைகள் உள்ள நிலையிலும் 60 ஆண்டுகள் கழித்து தனது முதல் காதலனை சந்தித்த 79 வயது பாட்டி தற்போது அவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

Ron Owen (84) மற்றும் Ruth Holt (79) ஆகிய இருவரும் 1950 ஆம் ஆண்டு ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய போது காதலர்களாக இருந்துள்ளனர். சில ஆண்டுகள் டேட்டிங் சென்ற இவர்கள் அதன் பிறகு, தங்கள் பணிநிமித்தமாக பிரிந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

ஏனெனில், Ron Owen - க்கு இசை மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் அலுவலகத்தில் இருந்து விலகி, பாடகராகும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கினார். அந்த முயற்சியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடும் வாய்ப்பையும் பெற்றார்.

Ruth Holt - ம் வேறு ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். இவருக்கு தற்போது 4 பேரக்குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகள் கழித்து தனது கணவரை விவாகரத்து செய்த இவர், தனது பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

என்னதான் திருமண வாழ்க்கையில் இணைந்தாலும், Ruth Holt - க்கு தனது முதல் காதல் மிகவும் பசுமையான நினைவுகளை கொண்ட காலமாக இருந்ததால் அவ்வப்போது தனது முதல் காதலன் பற்றி சிந்தித்துள்ளார்.

மேலும், தனது முதல் காதலன் தற்போது எப்படி இருப்பான் என்றெல்லாம் இவர் கற்பனை செய்ததுண்டு. ஆனால், அவரை மீண்டும் சந்திப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை.

இந்நிலையில் தான் யூலை மாதம், Lancashire இல் நடைபெற்ற நிகழ்ச்சியில், Ron Owen இசை கச்சேரி நடத்தியுள்ளார். தனது முன்னாள் காதலனை பார்த்ததும், தனது வாழ்நாள் சந்தோஷத்தை அடைந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் அடையாளம்கண்டு அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.

இருவருக்குள்ளும் இருந்த பழைய காதல் மீண்டும் மலர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டு முறை சந்தித்துக்கொண்ட இவர்கள் தற்போது, செப்டம்பர் மாதம் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers