லண்டனில் பட்டப்பகலில் நடந்த கொடூர தாக்குதல்! உயிருக்கு போராடும் இரண்டு பெண்கள்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் பட்டப்பகலில் இரண்டு பெண்கள் தாக்கப்பட்டதால், அவர்கள் உயிருக்கு போராடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Greenwich பகுதியில் இன்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 12.10 மணிக்கு இரண்டு பெண்களை மர்மநபர் கொடூரமாக தாக்கியதால், அந்த பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருப்பதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், சுமார் 30 மற்றும் 64 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் Greenwich-ன் Adderley Gardens பகுதியில் பயங்கரமாக தாக்கப்பட்டு கிடந்தனர்.

இந்த செயலை அந்த பெண்ணின் உறவினர்கள் செய்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக Joe Xuereb என்ற இளைஞரை தேடி வருவதாகவும், அவரிடம் இது குறித்து விசாரித்தால், என்ன காரணம் என்பது தெரியவரும் என்று கூறி, அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படியும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்