திருமணமான 13 மணி நேரத்தில் உயிரிழந்த கணவன்! மனைவி கண்முன் நடந்த சோகம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் திருமணமான 13 மணி நேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணவன், மனைவியின் கண்முண்ணே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த Michelle (32) என்ற பெண், தன்னுடைய திருமணம் மற்றும் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், நானும் என்னுடைய கணவர் Scott-ம் ஆன்லைன் இணையதளத்தின் மூலம் தான் சந்தித்தோம். அதன்பின்னர் மூன்று, நான்கு வாரங்களில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம். இரண்டு வருடங்களாக எங்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில், திடீரென கடந்த 9-ம் தேதியன்று Scott-ற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொள்ளும்பொழுது, அவருக்கு புற்றுநோய் இருப்பதும், அது நான்காவது கட்டத்தை எட்டியிருப்பதும் தெரியவந்தது. இன்னும் எத்தனை மாதங்கள் உயிருடன் இருப்பர் என நான் கேட்ட பொழுது அவர்கள் அளித்த பதில், தாங்க முடியாத துயரத்தை அளிப்பதை போன்று இருந்தது.

மாதங்கள் இல்லை. இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பர் என கூறினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதலில் உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லிவிடுங்கள். அதற்கு முன்னதாகி திருமணம் செய்யுங்கள் என மருத்துவர் கோரிக்கை விடுத்தார்.

அதனடிப்படையில் வேகவேகமாக திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தோம். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதை நாங்கள் புரிந்துகொண்ட, புதன்கிழமையன்று திருமணம் செய்துகொண்டோம்.

அவருடைய நண்பர்கள் உறவினர்கள் என அதிகமானோர் கலந்துகொண்டனர். அவர் நாற்காலியில் அமர்ந்தபடியே என்னை திருமணம் செய்துகொண்டார்.அதுவரை பேச முடியாமல் இருந்த அவர், என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என கேட்டதும், அதிக சத்தத்துடன் சம்மதம் என கூறினார். இதை கேட்டு அங்கிருந்த அனைவருமே சிரித்தனர்.

பின்னர் தூங்க வேண்டும் என Scott கூறியதும் அவரை தூங்க வைத்துவிட்டு அவரது அருகிலேயே இருந்தேன்.

அப்பொழுது தான் அவரது இறுதி கட்டம் நெருங்கிவிட்டது என்பது எனக்கு தெரியாது. அவரை எனது மடியில் அணைத்தவாறே, 'ஒன்றுமில்லை பேபி. இப்போதைக்கு சென்று வா' என தேற்றினேன் அடுத்த சில நிமிடங்களிலே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

அவரை திருமலை செய்துகொண்டு 20, 30 வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என கனவு கண்டிருந்தேன். ஆனால் அது 13 அம்மணி நேரத்திலே முடிந்துவிட்டது என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைக்கு தனக்கு மிகப்பெரிய குடும்பம் கிடைத்துள்ளதாகவும் Michelle பெருமையடைந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்