பிரித்தானிய மகாராணியை அவமானப்படுத்திய நடிகர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் மகாராணி எலிசபெத்தை போன்று உடை அலங்காரம் செய்து நடித்த நடிகருக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரித்தானியாவில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் James Corden (39). இவர் தற்போது Matt Smith கதாநாயகனாக நடிக்கும் Lizzie & The Duke என்ற தொடரில் நடித்து வருகிறார். Netflix-ல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புதிய அத்தியாயத்தில், பிரித்தானிய அரச குடும்பத்தை அவமதிப்பதை போன்ற காட்சிகள் தொடரில் இடம்பெற்றுள்ளன. அதில் நடிகர் James, பிரித்தானிய மகாராணி வேடத்தில், அவரை போன்ற உடை அணிந்து தோன்றியுள்ளார்.

மற்றொருபுறம் Matt Smith இளவரசர் Philip வேடத்திலும் தோன்றியுள்ளார். இருவரும் அமெரிக்க தெருக்களில் இருக்கும் ரௌடிகளை விரட்டி விரட்டி தாக்குவதை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அரச குடும்பத்தை அவமதிப்பதை போன்ற இந்த காட்சிகள் இருப்பதாக பிரித்தானியாவை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிலும், மகாராணியை போன்று நடித்த James-ஐ, நீயெல்லாம் ஒரு நடிகனா என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இத்தகைய எதிர்ப்புகளால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கூட James கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்