வேற்று பெண்ணின் தாய்ப்பாலை குடித்ததால் இளம்பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அறிமுகம் இல்லாத வெளிநாட்டு பெண் ஒருவரின் தாய்ப்பாலை குடித்ததால் உடல் எடையை இழந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த Bianca Collins (30) என்ற இளம்பெண், தன்னுடைய நண்பர் ஒருவரின் அறிவுரையின்படி வேற்று பெண்ணின் தாய்ப்பாலை குடித்ததால் அதிகமான உடல் எடையை இழந்துள்ளார்.

இதுகுறித்து Bianca கூறுகையில், எனக்கு உடல் எடை அதிகமாக இருந்ததால், அதனை குறைப்பதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். அப்பொழுது ஒருநாள் என்னுடைய தனிப்பட்ட பயிற்சியாளர் ஜானி எனக்கு ஒரு பானம் கொடுத்து குடிக்க சொன்னார்.

நான் அதனை குடித்த பொழுது, அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை பற்றி அவரிடம் கேட்கும்பொழுது, வெளிநாட்டு சேர்ந்த பெண் ஒருவரின் தாய்ப்பால் எனவும், இதனை குடித்தால் உடல் எடை குறையும் எனவும் கூறினார்.

அதனை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதை பற்றி அதிகமாக இணையதளத்தில் விசாரித்து பின்னர், அவர் ஆர்டர் செய்த அமெரிக்க இணையதளத்திலே நானும் ஆர்டர் செய்து வாங்கினேன்.

அதில் சாக்லேட் பவுடரை கலந்து தினமும் குடிக்க துவங்கினேன். அது மாட்டு பாலை விட மிகவும் இனிமையாக இருந்தது. ஆரம்பத்தில் £200 பவுண்ட்ஸ்க்கு வாங்க ஆரம்பித்து பின்னர் அதன் எதிரொலி தெரிய ஆரம்பித்ததால், £400 பவுண்ட்ஸ்க்கு வாங்க ஆரம்பித்தேன்.

இதன் விளைவாக என்னுடைய உடல் எடையில் 12.7 கிலோ உடல் எடை குறைந்தது. இதனை நினைத்து நான் ஒரு புறம் பெரும் மகிழ்ச்சியில் இருந்தாலும், என்னுடைய காதலன் இதை காரணம் காட்டி என்னை பிரிந்து சென்றுவிட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், யாரேனும் இந்த புரோடீன் உணவை வாங்கினால் நன்கு ஆராய்ந்து எச்சரிக்கையுடன் வாங்குமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காதலன், எந்த ஒரு அறிவியலிலும், தாய்ப்பாலை குடிப்பதால் உடல் எடை குறையும் என நிரூபிக்கப்படவில்லை. உடலுக்கு சத்து அளிக்கும் விதமாகவே தாய்ப்பால் இருந்து வந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்