வயிறு வீங்கியதால் கர்ப்பமாக இருப்பதாக நினைத்த இளம்பெண்: காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்த நிலையில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருந்தது பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வடக்கு லண்டனை சேர்ந்தவர் ரோசா ஹெஸ்மோண்ட்லா. நடிகையான இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் வயிறு வீங்க தொடங்கியது.

இதையடுத்து ரோசாவின் நண்பர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள்.

இந்நிலையில் ரோசாவின் வயிறு மேலும் வீங்கிய நிலையில் வலியும் ஏற்பட்டது.

இதனால் மருத்துவமனைக்கு சென்ற ரோசா பரிசோதனை செய்த போது அவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியில் உறைந்தார்.

இதையடுத்து ரோசாவுக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது.

பின்னர் ரோசாவுக்கு ஆறு மணி நேரம் அளவில் பெரிய ஆப்ரேஷன் நடைபெற்றது.

இதையடுத்து அவர் குணமடைந்து வருகிறார். ரோசா கூறுகையில், புற்றுநோயை எதிர்த்து போராட வேண்டும் என முடிவெடுத்து நம்பிக்கையுடன் செயல்பட்டேன்.

தற்போது கருப்பை புற்றுநோயால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் வலைதளத்தில் எழுதி வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்