கார் விபத்தில் சிக்கிய காதலி... கடைசி நிமிடத்தில் காதலன் கூறிய வார்த்தைகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடந்த மோசமான கார் விபத்து ஒன்றில் பலியான காதலிக்கு , நெஞ்சை உருக வைக்கும் வார்த்தைகளை கொண்டு காதலன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் Coombe road பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்று எற்பட்டது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட Charlotte Staplehurst (21) என்ற இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அடுத்த 30 நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிங்ஸ்டம் பல்கலைகழகத்தில் மருத்துவம் சார்ந்த துறையில் படித்து வரும் Charlotte, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 19 வயதான Harry Foster என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்த விபத்தில் காதலி இறந்தது குறித்து Harry தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெஞ்சை உருக வைக்கும் வார்த்தைகளை கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில், இந்த உலகில் எனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடந்துவிட கூடாது. தான் அதிகமாக நேசிக்கும் ஒருவரை இழந்து வாட கூடாது. நான் உன்னுடன் கழித்த நேரங்களே என வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். நீ தான் என்னுடைய உலகம். உன் இடத்தை நிச்சயமாக இனி யாராலும் நிரப்ப முடியாது.என்னை மன்னித்துவிடு, நிச்சயம் நான் உன்னை விரைவில் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக Charlotte மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 27 வயதுள்ள ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்