மன வேதனையடைந்து லண்டனில் இருந்து ஓடிவந்த வெள்ளைக்கார பேத்தி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

கேரளாவில் பெயது வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இதுவரை அந்த வெள்ளத்தில் சிக்கி 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரள மக்களுக்கு பிற மாநிலங்களில் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காகவே முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக்கின் அண்ணன் வழி பேத்தியான டாக்டர் டயானாஜிப் கடந்த வாரம் லண்டனிலிருந்து கொச்சி வந்தவர் அப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களான மருந்துகளையும், மருத்துவ உதவிகளையும் செய்துள்ளார்.

அதன்பின்னர் தேனி மாவட்டத்திற்கு சென்ற இவர், தனது தாத்தா எழுதி வைத்த ஆவணத்தை தேனி மாவட்ட சூப்பிரண்டான பாஸ்கரனிடம் அளித்துள்ளார்.

அதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இவர், கேரளா மாநிலத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

உலகத்திலேயே முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமான அணை. இந்த அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அந்த அளவுக்கு பலமாகத்தான் எனது தாத்தா பென்னிகுக் இந்த அணையை கட்டியிருக்கிறார். இந்த அணை விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மாநில மக்களின் நலனின் கருத்தில் கொண்டு நீர் மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்த வேண்டும்.

அந்த அளவுக்கு அணை பலமாக உள்ளது என எனது தாத்தா தனது ஆவண புத்தகத்திலேயே எழுதி வைத்திருக்கிறார். எனது கேரளா மக்கள் இதில் அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாடு, கேரளா மாநில மக்களிடையே நட்புறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்