லண்டனில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை காப்பாற்ற போராடிய பொலிசார்! வெளியான வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொலிசார் காப்பாற்ற போராடியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Camberwell பகுதியில் நேற்றிரவு 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் மோதிக் கொண்டதில் இளைஞர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், நான்கு பேருக்கு கத்தி குத்து காயம் இருப்பதாகவும், அவர்களுக்கு 15 முதல் 16 வயது வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் காரணமாக ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொலிசார் மற்றும் மருத்துவர்கள் காப்பாற்ற போராடியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் பொலிசார் இரண்டு இளைஞர்களை காப்பாற்றுவதற்கு மருத்துவ பொருட்களை பயனபடுத்துகின்றனர். மருத்துவர்களும் உடன் இருக்கின்றனர்.

மேலும் சில பொலிசார் அங்கிருக்கும் இளைஞர்களை சிலரை பிடிப்பது போன்று உள்ளது.

இந்த சம்பத்தைக் கண்ட Susan என்பவர் கூறுகையில், குறித்த பகுதிக்கு ஏராளமான பொலிசார் வந்தனர். அவர்கள் சரிந்து கிடந்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கு போராடி வந்தனர்.

அப்போது அங்கிருந்த கருப்பு நிற இளைஞர் ஒருவர் நான் அவனை கொல்ல வேண்டும் என்று என்று கத்துகிறார். இதைக் கண்ட பொலிசார் அவரை ஓடிச் சென்று பிடிக்கின்றனர்.

முதலில் நான் பார்த்த போது ஒரு நபர் தான் கத்தியால் தாக்கப்பட்டு விழுந்து கிடந்தது போன்று இருந்தது. அதன் பின் ஒரு இடத்தில் மூன்று இளைஞர்கள் கீழே விழுந்து கிடந்தனர். ஒரு நபர் எழுந்து நடந்தார்.

கீழே விழுந்து கிடந்த நபர்களுக்கு பொலிசார் பேண்டேஜ் போட்டு அவர்களைக் காப்பாற்ற முதலுதவி கொடுத்துக் கொண்டிருந்தனர் என கூறியுள்ளார்.

மேலும் இரண்டு இளைஞர்களின் வயிற்றுப் பகுதி கத்தியால் கிழிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் அவர்கள் கிடந்ததாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்