பிரித்தானியாவில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட தாய் மற்றும் மகளின் சடலம்: கொலையா? தற்கொலையா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் கேன்டர்பரி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அழுகிய நிலையில் தாய் மற்றும் மகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

குறித்த தாயார் மற்றும் மகளை கடந்த 3 மாதங்களாக அப்பகுதி மக்கள் எவரும் பார்த்ததில்லை எனவும் கூறப்படுகிறது.

கென்ட் மாவட்டத்தின் Sturry பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து கெட்ட வாடை வீசியதை அடுத்து கடந்த திங்களன்று அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் குடியிருப்புக்குள் சென்று பார்த்ததில், 63 வயதான பெரைல் சோபா ஒன்றில் படுத்த நிலையிலும், 91 வயது ஜாயிஸ் தரையிலும் சடலமாக கிடந்துள்ளன.

இருவரது உடலும் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில் இருவரின் மரண காரணம் என்ன என்பது தொடர்பில் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.

தாய் மற்றும் மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்படும் வகையில் பொலிசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

தற்போது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கெமராக்களை ஆய்வுக்கு உட்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...