ரத்த வெள்ளத்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட லண்டன் இளைஞர்: பொலிசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

தெற்கு லண்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடல் வெளியே வரும் அளவுக்கு இளைஞர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனில் நேற்றிரவு நடந்த இச்சம்பவத்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள Camberwell நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் கும்பல் ஒன்று குறித்த இளைஞரை சுற்றி வளைத்து கொடூரமாக கத்தியால் தாக்கியுள்ளது.

அப்பகுதியில் சமீப காலத்தில் நடந்த 4-வது கும்பல் தாக்குதல் சம்பவம் இதுவென்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு பொலிசார் வந்து சேரும் முன்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.

குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், அந்த இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், அவரது குடல் வெளியேறும் அளவுக்கு கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த இளைஞர் உதவி கேட்டு அழுதுள்ளார். சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் 6 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அதில் நான்கு பேருக்கு கத்தி காயங்கள் இருந்துள்ளதாகவும், அவர்களையும் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்