பிரித்தானிய பொலிசார் குறித்து ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 1800 பொலிசாரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பொலிசாரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தப்புவதில்லை என்பது தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறான தொடுதல், மோசமான பார்வை, சகாக்களுடன் பாலுறவு கொள்ள வற்புறுத்தல் என பல நிலைகளில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் துறையில் பணி புரியும் உதவி அலுவலர்கள், குற்றம் நடந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ளுபவர்கள், கிளர்க்குகள், தடயவியல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட பொலிசார் எத்தகைய சீண்டல்களுக்கு ஆளானார்கள் என்பது இந்த ஆய்வில் கேட்கப்படவில்லை.

என்றாலும் பாதி பேர் ஆபாச ஜோக்குகளைக் கேட்க வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

ஐந்தில் ஒருவருக்கு ஆபாச மெயில் அல்லது குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. 25இல் ஒருவர் பாலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள், 12இல் ஒருவர் பாலுறவு கொள்ள சம்மதித்தால் நல்ல முறையில் கவனித்துக் கொள்ளப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளார்கள்.

மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் துணையுடன் வாழும் அந்தரங்க வாழ்வு பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளார்கள்.

ஐந்தில் ஒரு பங்கினர் ஆபாச பார்வைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஐந்தில் ஒருவர் தவறாக தொடப்பட்டுள்ளார்கள்.

மிக நீண்ட காலமாக உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான ஒரு பெண் பொலிஸ் வேலையை விட்டே போய் விட்டதாக தெரிவிக்கும் ஒரு பெண் பொலிசார், தானும் வேலையை விட்டு போய் விட முடிவு செய்துள்ளதாகவும் ஆசிரியர் வேலைக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சி ஆய்வு வெளியானதையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்